பாரதியார் கவிதைகள்


நான் இணையத்தில் படித்த பாரதியார் கவிதையை இங்கே தந்துள்ளேன் .
நீங்களும் படியுங்களேன்

பாரதியார் கவிதைகள்

பாரதியார் கவிதைகளில் ஒன்று

1. வந்தே மாதரம்

ராகம் - நாதநாமக்கிரியை தாளம் - ஆதி
பல்லவி
வந்தே மாதரம் என்போம் - எங்கள் மாநிலத் தாயை வணங்குதும் என்போம். (வந்தே)
சரணங்கள்
ஜாதி மதங்களைப் பாரோம் - உயர்
ஜன்மம் இத் தேசத்தில் எய்தின ராயின்
வேதிய ராயினும் ஒன்றே - அன்றி
வேறு குலத்தின ராயினும் ஒன்றே (வந்தே) 1

ஈனப் பறையர்க ளேனும் அவர்
எம்முடன் வாழ்ந்திங் கிருப்பவர் அன்றோ?
சீனத்த ராய்விடு வாரோ? - பிற
தேசத்தர் போற்பல தீங்கிழைப் பாரோ? (வந்தே) 2

ஆயிரம் உண்டிங்கு ஜாதி - எனில்
அன்னியர் வந்து புகல் என்ன நீதி? - ஓர்
தாயின் வயிற்றில் பிறந்தோர் - தம்முள்
சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ? (வந்தே) 3

ஒன்று பட்டால் உண்டு வாழ்வே - நம்மில்
ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே
நன்றிது தேர்ந்திடல் வேண்டும் - இந்த
ஞானம் வந்தாற்பின் நமக்கெது வேண்டும்? (வந்தே) 4

எப்பதம் வாய்த்திடு மேனும் - நம்மில்
யாவர்க்கும் அந்த நிலைபொது வாகும்
நூறு கோடியும் வாழ்வோம் - வீழில்
நூறு கோடி முழுமையும் வீழ்வோம் (வந்தே) 5

புல்லடி மைத்தொழில் பேணிப் - பண்டு
போயின நாட்களுக் கினிமனம் நாணித்
தொல்லை இகழ்ச்சிகள் தீர - இந்தத்
தொண்டு நிலைமையைத் தூவென்று தள்ளி (வந்தே) 6 .
ஸ்டார்ஜன்

இட்லி சாம்பார்

இட்லியை சாம்பாரில் உறப்போட்டு சாப்பிடும் சுவையே தனிதான் . சாம்பார் ஊசாதவரைக்கும்??.
இது போல தான் நம் வாழ்க்கையும் !!.

என் பார்வையில்

ஏகன் திரைப்பார்வை ,

ஏகன் படத்தை எல்லோரும் விமெர்சனம் பண்ணியிருக்காங்க . நானும் விமெர்சனம் பண்ணினாதான் அது நன்றாக ஓடும் . இந்த படத்தில் அஜித் கொழுகொழு இருக்கிறார் . நன்றாக நடித்தும் இருக்கிறார் !!!. அவர் கல்லூரியில் சேர்ந்த உடனேயே விரிவுரையாளராக உள்ள நயனை பார்த்து பாட்டுபாடிகாதல் செய்கிறார் . கல்லூரியில் அவர் செய்யும் லூட்டி சகிக்க முடியாமல் அனைவரையும் கவரும் படியாக உள்ளது . அட! நம்ம அஜித்தா இது!!!.. கதை என்னான்னா


தொடரும் ........
நாம் எல்லாம் ஒரு விஷயத்தை நன்றாக புரிந்து கொள்ள வில்லை . எல்லோரும் அநத விஷயத்திற்காக தான் சண்டை போட்டு கொள்ளுகிறோம் . மறுபடியும் அநத விஷயத்தை தான் தேடி அலைகிறோம். அநத விஷயத்தில் மும்முரமாக ஈடுபடுகிறோம் . அநத விஷயம் பற்றி தெரிந்து கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லை .
என்ன நண்பர்களே ! எல்லாம் படித்திர்களா?. அநத விஷயம் பற்றி தெரிந்தால் யாராவது கூறுங்களேன் . !!!.

நம் சமுதாயம்

எல்லோருக்கும் வணக்கம்.

நான் இப்போது தான் வலை பதிவு எழுத ஆரம்பித்து இருக்கிறேன் . வலை பதிவு அன்பர்களே! உங்கள் ஆதரவு தேவை.